100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

51பார்த்தது
கூவத்தூர் ஊராட்சியில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சட்ட கல்லூரி மாணவர்கள்


வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி
செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட ஏ வி ஐ டி சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பில் வாக்காளர் உரிமையும் கடமையும் குறித்த தெருமுனை விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது, மூன்று நாட்கள் நடைபெற உள்ள முகாமின் முதல் நாளான இன்று கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிலையம் அருகே கல்லூரி முதல்வர் ஆனந்த், துறை தலைவர் பத்மநாபன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பேராசிரியர்கள் பௌமினா மற்றும் சரவணன் உள்ளிட்டோருடன் 30 க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் ஒட்டிற்கு காசு வாங்க கூடாது என உறுதி மொழி ஏற்றதுடன் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விரிவாக விளக்கி கூறியதுடன் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என பஜார் வீதி வழியாக பேரணி சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி