பள்ளி, கல்லுாரி விடுதியில் சேர மாணவர்களிடம் விண்ணப்பம்

58பார்த்தது
பள்ளி, கல்லுாரி விடுதியில் சேர மாணவர்களிடம் விண்ணப்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு 17 விடுதிகள் செயல்படுகின்றன.

பள்ளி விடுதிகளில், நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ - மாணவியருக்கும், கல்லுாரியில் பட்டப்படிப்பு, டிப்ளமா படிக்கும் மாணவர்களும் இந்த விடுதிகளில் சேரலாம்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 2, 00, 000 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வசிப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் 8 கி. மீ. , துாரத்துக்கு மேல் இருக்க வேண்டும்.

விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்திலோ பெறலாம்.

பள்ளிகளுக்கான விடுதியில் சேர, ஜூன் 14ம் தேதிக்குள்ளாகவும், கல்லுாரிக்கான விடுதியில் சேர, ஜூலை 15ம் தேதிக்குள்ளாகவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.

டேக்ஸ் :