மறைமலைநகரில் மதுபானம் விற்ற மூன்று பேர் கைது

83பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பதாக தகவல் வெளியான நிலையில் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் அங்கு சென்று சோதனை செய்ததில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்தது உறுதியானது அப்போது விற்பனை செய்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் வயது 28 என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.!!

தற்போது மீண்டும் தொடர்கதையாக 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி கூடுதல் விலைக்கு மதுபானம்
விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்த நிலையில் தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் கொண்ட போலீசாரின் குழு அங்கு சென்று சோதனை செய்தது

அப்போது அங்கு ரகசியமாக மூன்று பேர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ப்பது தெரியவந்தது அவர்களை மடக்கி பிடித்து மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்

விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமரன் வயது 46 , புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் வயது 22, மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சீனு வயது 22 என்பது தெரியவந்தது

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் 350 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி