செங்கையில் டெங்கு பலி இல்லை - சுகாதார துறையினர் விளக்கம்

51பார்த்தது
செங்கையில் டெங்கு பலி இல்லை - சுகாதார துறையினர் விளக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருவர் டெங்கு காய்ச்சலில் இறந்ததாக, தனியார் டி. வி. , க்களில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. இத்தகவலை, மாவட்ட மருத்துவ துறையினர் மறுத்துள்ளனர். இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார் கூறியதாவது:

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், எட்டு பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூன்று பேருக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது, நேற்று முன்தினம் ( செப்டம்பர் 14) உறுதியானது. அனைவரும், சிகிச்சையில் உள்ளனர். ஆனால், டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்ததாக, தவறான தகவல் பரவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பரணிதரன் கூறியதாவது:

மாவட்டத்தில், காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால், ஒருவர் இறந்ததாக தொலைக்காட்சிகளில் பரவியது தவறான தகவல். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி