செங்கல்பட்டில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

55பார்த்தது
செங்கல்பட்டில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா - அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மாவட்ட அளவிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம், அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்று திறம்பட பணியாற்றிய கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு நலச்சங்கம், மற்றும் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், ஆதம்பாக்கம் கட்டிட கூட்டுறவு கடன் சங்கம், இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்ஙளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதேபோல திறமையாக செயல்பட்ட நகர்மன்ற தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1678 பயனாளிகளுக்கு 3571 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அலுவலர்கள் என துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி