பஜ்ஜி போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த எம் எல் ஏ

83பார்த்தது
பஜ்ஜி கடையில் பஜ்ஜி போட்டுக் கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெல்வாய் பஜார் வீதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது நெல்வாய் பகுதியில் உள்ள பஜார் வீதியில் பஜ்ஜி கடையில் பஜ்ஜி போட்டுக் கொடுத்து துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இந்த நிகழ்ச்சியை மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் வி. ஜி. குமரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தணிகைவேல் இவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி