மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

70பார்த்தது
அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் வேலி போட்டதால் விவசாய நிலத்திற்கு செல்ல முடியவில்லை என கோரி மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் பகுதி சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரும்புலி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர் இந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் விளை நிலங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர் இந்த நிலையில் தனிநபர் ஒருவர் அரசுக்கு சொந்தமான இடத்தை முள்வேலி போட்டதால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு விதை உரம் எடுத்து செல்வதற்கும் உழவு ஓட்ட ட்ராக்டர் செல்வதற்கு வழி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் விவசாயத்தை காக்கும் வகையில் தனிநபர் அரசுக்கு சொந்தமான இடத்தை கம்பிவேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு கம்பி வேலியை அகற்ற கோரி மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைத்து தீர்வு கூட்டத்தில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி