அமைச்சர் பொய்யாமொழி பள்ளியில் திடீர் ஆய்வு.

583பார்த்தது
மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234/77 ஆய்வுப் பயணத் திட்டத்தின் கீழ் 121'வது தொகுதியாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
திருமதி. வரலட்சுமி மதுசூதனன் அவர்களின்
செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் காலை உணவுத் திட்ட செயலாக்கத்தையும் பார்வையிட்டார்.

அப்பள்ளியில் செயல்படும் முதலமைச்சர் காலை உணவு திட்ட உணவு தயாரிப்பு மையத்தினையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை சந்தித்த அமைச்சர், மாணவர்களின் கல்வி கற்கும் திறன், பாடல், திருக்குறள், ஆங்கில பாடல் பாடச்சொல்லி அதனை கேட்டு மகிழ்ந்து மாணவச்செல்வங்களை பாரட்டினார்.

மேலும் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி