கூவி கூவி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு வாக்கு சேகரிப்பு

592பார்த்தது
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகர்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது கிராமப்புறங்களில்வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய இரண்டு டாட்டா ஏசி வாகனத்தில் பொதுமக்களைஏற்றிக்கொண்டு அந்தந்த பகுதிகளில் டாட்டா ஏசி வாகன மூலம் அழைத்து வரப்பட்ட பொதுமக்களை நிற்க வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர்மற்றொருகிராமத்திற்கு செல்லும் பொழுது இங்கிருந்த பொது மக்களை மீண்டும் டாட்டா ஏசி வாகனத்தில் அழைத்து சென்று கிராமத்திலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய பொதுமக்களை அழைத்துச் சென்றனர். முன்னதாக வாக்கு சேகரிப்பின் போது வந்த வாகனங்கள் சாலை ஓரத்தில் இருந்த முதியவர் மீது பிரச்சாரத்திற்கு வந்த இரு சக்கரம் வாகனம் மோதியதில் முதியவர் காயமடைந்தார் அவரைக் கண்டு கொள்ளாமல் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்காமல் அவருக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.
ரத்த காயங்கள் உடன் அந்த முதியவர் சாலையில் பரிதாபத்துடன் நின்று இருந்தார். இது மட்டும் இல்லாமல் வேட்பாளருக்கும் ஒரே சால்வைவேட்பாளருடன் உடன் வந்தவர்களுக்கும் அதே சால்வையை கீழிருந்து மேலவும், மேல இருந்து கீழவும் வீசி வருகின்றனர்.
இது மட்டும் இல்லாமல் அழைத்துவறப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு லிஸ்ட் எடுக்கப்பட்டது அந்த லிஸ்டில் என் பெயரை விட்டுட்டீங்க என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி