தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்

53பார்த்தது
தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்


மதுராந்தகம் அருகே வேட்டூர் ஊராட்சியில் உள்ள விளங்கனுார் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் 39 வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரிப்பால் தற்போது வீடுகட்ட போதிய இடவசதி இல்லாமல் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை மீட்டு அந்த இடத்தில் வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என
கடந்த 19 ஆண்டுகளாக துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை,
ஆகையால் 19ம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, பேருந்து நிறுத்தம், விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்களில் பேனர்கள் வைத்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி