மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சாய்தளம் அமைக்கும் பணி தீவிரம்

51பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சாய்தளம் அமைக்கும் பணி தீவிரம்
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 8 லட்சத்து 53 ஆயிரத்து 456 ஆண் வாக்கா ளர்களும், 8 லட்சத்து, 95 ஆயிரத்து, 107 பெண்வாக்காளர்களும், 6 லட்சத்து 73 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும், 303 திருநங்கை யர் என, 17 லட்சத்து 48ஆயிரத்து 866 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 8, 250மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், மாற்றுத்திறனாளி களின் ஓட்டளிக்கும் ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடிகளில், தேர்தல் தினத்தன்று 'வீல்சேர்'கள் தயார் நிலையில் இருக்கும் எனவும், தேர்தல் அதிகாரிகள்தெரிவித்து உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் வீல்சேரில் சென்று ஓட்டளிப்பதற்கு வசதியாக, சாய்தள வசதி இல்லாத ஓட்டுச்சாவடிகளில், சிமென்ட் கலவை மூலம், சாய்தளம் அமைக்க தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், சாய்தளம் வசதி இல்லாத ஓட்டுச்சாவடிகளில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வீல்சேரில் வந்து ஓட்டளிக்க வசதியாக சிமென்ட் கலவை மூலம் சாய்தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, இந்திரா நகரில் உள்ள ஓட்டுச்சாவடியில், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்தளம் அமைத்து கைப்பிடி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி