நடவாவி கிணறு வளாகத்தில் 3, 000 மரக்கன்று நடும் விழா

64பார்த்தது
நடவாவி கிணறு வளாகத்தில் 3, 000 மரக்கன்று நடும் விழா
காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள நடவாவி கிணற்றில், ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கிணறு அமைந்துள்ள வளாகம் சுற்றிலும், 5 ஏக்கர் காலியாக உள்ள இடத்தை கலெக்டர் கலைச்செல்வி ஆகஸ்ட்டில் ஆய்வு செய்தார். காலி இடங்களில் நிழல் மற்றும் பழ வகை மரக்கன்றுகளை நட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இதையடுத்து, அய்யங்கார்குளம் ஊராட்சி மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், முதற்கட்டமாக, 2 ஏக்கர் இடத்தில், மா, பலா, கொய்யா, நெல்லி, தென்னை, நாவல் உள்ளிட்ட பழ வகை மற்றும் நிழல் தரும் வகையில், 1, 000த்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில், புங்கன், நாவல், கொடுக்காப்புளி, வேம்பு நீர்மருது உள்ளிட்ட 3, 000 மரக்கன்றுகள் நடும் துவக்க விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மலர்கொடி, துணை சேர்மன் திவ்யபாரதி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி