செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் யுடன் கூடிய கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியான சிங்கப்பெருமாள்கோவில், திருக்கச்சூர், பெரியார்ந்நகர், பேரமனூர், சட்டமங்கலம் மறைமலைநகர் காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வழக்கத்திற்கு மாறாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் இந்த பகுதி முழுவதுமே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.!