மதுராந்தகம் நகராட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டம்

78பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் நகர மன்ற சிறப்பு கூட்டம் நகர மன்ற தலைவர் மலர்விழிகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு கூட்டத்தில் மதுராந்தகம் 1974 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது மதுராந்தகம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று 50 வது ஆண்டு பொன்விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்த வாக்காளருக்கும் நகர மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டை சீர்மிகு முயற்சியில் சிறப்பான பாதைக்கு இட்டு சென்ற தமிழ்நாட்டின் தானை தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் போலவே தமிழ்நாட்டை உயர்வு நிலைக்கு ஏற்படுத்த இரவு பகல் பாராமல் உழைப்பு உழைப்பு என்ற தாரக மந்திரத்தை ஏற்று மக்களின் துயர் நீக்கி தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் அவரின் சீரிய தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you