ஏழு எருமை மாடுகள் மர்மமான முறையில் பலி

2251பார்த்தது
ஏழு எருமை மாடுகள் மர்மமான முறையில் பலி
திருப்போரூர் அருகே காலவாக்கம் ஆறுவழிச் சாலையில், இருபுறமும் ஏழு எருமை மாடுகள் உயிரிழந்து கிடந்தன. நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள் திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் மற்றும் திருப்போரூர் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணையில், நெம்மேலி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான மாடுகள் என தெரிந்தது.

பின், அனைத்து மாடுகளையும் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி, பகிங்ஹாம் கால்வாய் அருகே உள்ள காலி இடத்தில், கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

மர்ம நபர்கள் மாடுகளுக்கு விஷம் கொடுத்து அல்லது மின்சாரம் வைத்துக் கொன்று, அதை வாகனத்தின் மூலம் சாலையில் கொண்டு வந்து வீசினரா என, பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி