செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய். பிரனீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை பொருத்தவரை காஞ்சிபுரம், ஸ்ரீபெருமந்தூர், கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம், மதுராந்தகம், மேல்மருவத்தூர், வந்தவாசி, உத்திரமேரூர் என செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் இருந்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினம் தினம் பல ஆயிரகணக்கான மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்வதால் மருத்துவமனையில் புதிதாக புறகாவல் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார், செங்கல்பட்டு கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், செங்கல்பட்டு நகர காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், தனிப்பிரிவு காவலர்கள் ஜெகன், பச்சமுத்து, மற்றும் வருவாய்துறை, காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.