வாரணவாசி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

76பார்த்தது
வாரணவாசி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
வாலாஜாபாத்- - தாம்பரம் நெடுஞ்சாலையில், வாரணவாசி பகுதி உள்ளது. தொள்ளாழி, மதுரப்பாக்கம், வெண்பாக்கம், குண்ணவாக்கம், அகரம், திருவாங்கரணை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், வாரணவாசி பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து படப்பை, ஓரகடம், தாம்பரம், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இப்பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.

இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், மழை மற்றும் வெயில் நேரங்களில் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி