சிங்கபெருமாள் கோவில் அருகே முதியவர் பலி

51பார்த்தது
சிங்கபெருமாள் கோவில் அருகே முதியவர் பலி
சிங்கபெருமாள் கோவில் அடுத்த குருவன்மேடு தடிகாரன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரராகவன், 69; ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு வில்லியம்பாக்கம் கிராமத்தில் இருந்து குருவன்மேடு செல்ல காத்திருந்தார். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றார்.

வில்லியம்பாக்கம் அருகில் வந்த போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததால், வீரராகவன் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி