செங்கல்பட்டில் பரபரப்பு: நண்பனை எரித்து கொன்ற மூவர்..

4689பார்த்தது
செங்கல்பட்டில் பரபரப்பு: நண்பனை எரித்து கொன்ற மூவர்..
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அடுத்த அல்லாணூர் பகுதியில், கடந்த செப்டம்பர் 16ம் தேதி தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்து, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக ஒரத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் டில்லிபாபு என்பது தெரிந்தது. மேலும் விசாரணை செய்ததில் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் சுரேஷ் (38) என்பவர் தனது நண்பர்கள் வேலூர் மாவட்டம் ஹரிகிருஷ்ணன் (32) மற்றும் தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதி கீர்த்தி ராஜன் ஆகியோருடன் சேர்ந்து குடிசை வீட்டில் வைத்து டில்லிபாபுவை எரித்து கொன்றது தெரியவந்தது.

மேலும் சுரேஷ் ரூ. 1 கோடிக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் காப்பீடு செய்திருந்ததால், அந்த பணத்தை பெற ஏற்கனவே தனது பகுதியில் குடியிருந்த டில்லிபாபுவை அழைத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து மது ஊற்றி கொடுத்து எரித்துள்ளார்.

மேலும் சுரேஷ், தான் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, டில்லிபாபுவின் உடலை தனது அக்கா மூலம் பெற்று, அடக்கம் செய்து, இறந்தது சுரேஷ் தான் என அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் பணம் பெற நண்பனை கொன்று நாடகமாடியது செங்கல்பட்டு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி