திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு...

53பார்த்தது
கூடுவாஞ்சேரியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

இந்தாங்க வெயிலில் ஜூஸ் குடித்துக்கொண்டே போங்க என்று பேருந்து பயணிகளுக்கு ஜூஸ் வழங்கிய அமைச்சர் அன்பரசன்.!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் அதேபோல தற்போது எப்ப செல்லனும் காரணமாக அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில் கூடுவாஞ்சேரி பகுதியில் திமுக சார்பில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது


கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர்
எம். கே டி கார்த்திக் தலைமையில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறக்கும் விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமு அன்பரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தர்பூசணி இளநீர் கூழ் பதநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்

அப்போது சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி சென்ற பேருந்து நிறுத்தி அமைச்சர் தா. மோ அன்பரசன் அவர்கள் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர் ஆகியோர்களுக்கு ஜூஸ், ரோஸ் மில்க் பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி