தடுப்புச்சுவர் இல்லாத கால்வாய் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

72பார்த்தது
தடுப்புச்சுவர் இல்லாத கால்வாய் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
காஞ்சிபுரம் கிருஷ்ணன் தெரு சந்திப்பில் இருந்து, கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையோரம் மஞ்சள்நீர் கால்வாய் செல்கிறது.

புத்தேரி ஊராட்சி மற்றும் அரசு, தனியார் பள்ளிக்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.

சாலையோரம் உள்ள கால்வாய் மீது கான்கிரீட் தளம் அல்லது தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோரம் உள்ள கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, விபத்தை தவிர்க்க கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி