மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

65பார்த்தது
சென்னை போரூர் டிஎல்எப் நிறுவனம் அருகே கத்திப்பாராவிலிருந்து போரூர் போகும் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்

கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் மாற்று திறனாளிகளுக்கு அரசு அறிவித்துள்ள நான்கு சதவீத இட ஒதுக்கீடில் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியீட்டு 9 மாதங்கள் ஆகிய இதுவரை அதற்கான நடவடிக்கை அரசு மேற்கொள்ளவில்லை எனக் கூறி தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து இன்று சென்னை போரூர் டிஎல்எப் அருகே மவுண்ட் பூந்தமல்லி சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்தும் படுத்துக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கிண்டியிலிருந்து போரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து. நின்றன இதனால் அரை 1 நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி