உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தல்

571பார்த்தது
மலேசியா நாட்டில் இருந்து, உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த, குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு தம்பதியினர், சென்னை விமான நிலையத்தில் கைது.

மத்திய வருவாய் புலனாய் துறையினர் நடத்திய சோதனையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, இரு பெண்கள் இரு ஆண்கள் ஆகிய 4 பேரிடம் இருந்து, ரூ. 2. 5 கோடி மதிப்புடைய, 4 கிலோ தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை.

குஜராத் மாநில கடத்தல் தம்பதியினர், இரு கை குழந்தைகளுடன், இந்த செயலில் ஈடுபட்டது, குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் மொத்தம் 6 பேர் வெளியில் வந்தனர். அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதை அடுத்து புலனாய்வு துறை அதிகாரிகள், அவர்களை தனி அறையில் சோதனை இட்டதில் கணவன் மனைவி ஜோடிகள் ஆன நான்கு பேரும், அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்கம் விதம் மொத்தம் 4 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்தனர். தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு கொண்டு சென்று, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி