நீர்மோர் பந்தலில் விசிறி கொடுத்த எம்ஜிஆர் இளைஞர் அணி

73பார்த்தது
கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் ஆதம்பாக்கம் உட்பட ஐந்து பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டும் தர்பூசணி இளநீர் நுங்கு திராட்சை போன்ற பல வகைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன அதுமட்டுமின்றி பனை ஓலையில் செய்த விசிறியும் வழங்கப்பட்டது அனைவரையும் நெகிழ வைத்தது


மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் A லட்சுமி காந்தன் என்கிற லோகேஷ் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்வில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜி பிரேம்குமார் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்


இதில் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி