கருங்குழி பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

55பார்த்தது
கருங்குழி பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் ஆகியோர் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி மேலவளம்பேட்டை பகுதியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், பழ வகைகள், குளிர்பானங்கள், உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா சங்கர் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தண்ணீர் பந்தலில் கோடைகாலம் முழுவதும் தினந்தோறும் பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு செயலாளர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு தினம்தோறும் நீர், மோர், உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்படும் என பேரூர் திமுக சார்பில் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி