பறக்கும் படை சோதனை ரூ. 25. 60 லட்சம் பறிமுதல்

79பார்த்தது
பறக்கும் படை சோதனை ரூ. 25. 60 லட்சம் பறிமுதல்
லோக்சபா தேர்தலையொட்டி, உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ரவுண்டானா அருகில், பறக்கும் படையினர் நேற்று மதியம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அந்த வாகனத்தில் இருந்த ரசீதில், 25 லட்சத்து 60 ஆயிரத்து 556 ரூபாய், தனியார் நிறுவனம் வாயிலாக, காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் பணம், திருவான்மியூரில் உள்ள வங்கி கிளை ஒன்றில் டிபாசிட் செய்வதற்கு எடுத்து செல்வதாக இருந்தது.

வாகன விபரங்களை இ. எஸ். எம். எஸ். , (ESMS) செயலியில், க்யூ. ஆர். , கோடு வாயிலாக ஸ்கேன் செய்து பார்த்தபோது, 29 லட்சத்து 36 ஆயிரத்து 535 ரூபாய் தொகை எடுத்துச் செல்லப்படுவதாக விபரங்கள் இருந்தன.

ஆனால், ரசீதில் உள்ள தொகைக்கும், க்யூ. ஆர். , கோடு வாயிலாக அறியப்பட்ட தொகைக்கும் வித்தியாசம் இருந்ததால், சந்தேகத்தின்படி, 25 லட்சத்து 60 ஆயிரத்து 556 ரூபாய் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. உத்திரமேரூர் சட்டசபை தொகுதியின் தேர்தல்நடத்தும் அலுவலர் வாயிலாக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அலுவலகத்திற்கும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி