பஸ்கள் நிலையத்திற்குள் வருமா?

74பார்த்தது
பஸ்கள் நிலையத்திற்குள் வருமா?
காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னை செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல், புறவழி சாலை வழியாக செல்கின்றன. இதனால், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர், அலுவலகம் செல்வோர் புறவழி சாலைக்கு சென்று பேருந்து பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், ஸ்ரீபெரும்புதுார் புறவழிசாலையில் பல பேருந்துகள் நிற்பதில்லை. எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி