தலைமறைவு குற்றவாளி கைது

62பார்த்தது
ரேஷன் அரிசி உணவு பொருட்கள் கடத்தல் வழக்கில், சென்னை சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசால், தேடப்பட்டு வந்த, சென்னையைச் சேர்ந்த இளைஞர், மலேசிய நாட்டிற்கு தப்பி ஓட முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது.

மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்ல, சென்னை விமான நிலையம் வந்தவரை, குடியுரிமை அதிகாரிகள், சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை ரத்து செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னையைச் சேர்ந்தவர் குமார் முகமது கலித் (29). இவர் மீது, ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கடத்தி பதுக்குதல் வழக்குகள், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசில் இருக்கிறது. எனவே சிவில் சிவில் சப்ளை குற்றப்பிரிவு சிஐடி போலீசார், குமார் முகமதுவை கலித்தை கைது செய்து விசாரணை நடத்துவதற்காக தேடி வந்தனர். ஆனால் இவர் கடந்த மூன்று மாதங்களாக, போலீஸிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு இவர் வெளிநாட்டிற்கு தப்பியோட திட்டம் திட்டியுள்ளார் என்றும் தெரிய வந்தது.

இதை அடுத்து சென்னை சிவில் சப்ளை குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, குமார் முகமது கலித்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு குமார் முகமது கலித் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்கும் விதத்தில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போடப்பட்ட நிலையில் பிடிபட்டார்

தொடர்புடைய செய்தி