லஞ்சம் பணத்தை எதிர்பார்க்கும் சார்பதிவாளர்

69பார்த்தது
அச்சரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த சொத்து பத்திரத்தை கேட்கும் போது லஞ்சம் பணத்தை எதிர்பார்க்கும் சார்பதிவாளர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திருப்பிராந்தகம். இவரது மனைவி அலமேலு. இவருக்கு கலைசெல்வி, தீர்த்தமலை, புஷ்பசேகர் என ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் மூவருக்கும் அலுமேலு தனது 4 ஏக்கர் 54 சென்ட் உள்ளது. தனது மகளான கலைசெல்வி 51 சென்ட் நிலமும், தீர்த்தமலை 1 ஏக்கர் 98 சென்ட் நிலமும் தான செட்டில்மெண்ட் செய்தார்.

கடந்த 5. 7. 2023 கலைசெல்வி, தீர்த்தமலைக்கும் நிலம் பதிவு செய்ததற்கான பத்திரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த 17. 08. 2023 அன்று அலமேலு தனது இரண்டாவது மகனான புஷ்பா சேகருக்கு நிலம் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புஷ்பா சேகர் பேருக்கு சொத்து பத்திர பதிவு செய்யப்பட்டது.

அச்சரப்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வாங்க சென்ற போது லட்சக்கணக்கில் லஞ்சம் பெரும் நோக்கில் சார் பதிவாளர் கடந்த ஏழு மாத காலமாக அலைகழிக்கின்றார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி