காமராஜரின் 122ஆவது பிறந்த நாள்.. தமிழக அரசு மரியாதை

61பார்த்தது
காமராஜரின் 122ஆவது பிறந்த நாள்.. தமிழக அரசு மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 122ஆவது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 15) காலை 8.15 மணியளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார். தொடர்ந்து, சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் உருவச் சிலைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்யவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி