சென்னை அண்ணா சாலையில் 5 மாடி கட்டடம் குலுங்கியதாக கூறி அங்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வெளியேறியதால் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.