நடிகை ஜெயபிரதாவின் சகோதரர் ராஜா பாபு நேற்று (பிப்ரவரி 27) ஹைதராபாத்தில் காலமானார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் நடிகையுமான ஜெயப்பிரதா, தனது சகோதரரின் மறைவு செய்தியை இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். அதில், எனது சகோதரர் பிற்பகல் 3:26 மணியளவில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.