காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன்?

51871பார்த்தது
காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன்?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகள் கேட்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உடன்படவில்லையென்றாலும், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டிவரும் கமலுக்கு இந்த வாய்ப்பு அமையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி