சின்னசேலம் அருகே கணவன் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

59பார்த்தது
சின்னசேலம் அருகே கணவன் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு
சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல் கிராமத்தில் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து வயது 75 இவர் கடந்த ஐந்து வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சுத்திணறல் காரணமாக செல்லமுத்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஏலக்கண்ணி திடீரென அவரும் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கணவன் இறந்த அரை மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி