1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் 3 மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஏப்ரல் 20, 1912-ல் The Daily Mirror செய்தி வெளியிட்ட நிலையில் 112 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தில் உள்ள ஒரு வீட்டின் அலமாரியில் இருந்து அந்த செய்தித்தாள் கண்டுபிடிக்கப்பட்டது.