சங்கராபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் நியமனம்

76பார்த்தது
சங்கராபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் நியமனம்
சங்கராபுரம் ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர்கள் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அ. தி. மு. க. , செயலாளர் குமரகுரு பரிந்துரையின் பேரில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் வடக்கு ஒன்றிய அ. தி. மு. க. , செயலாளராக இளந்தேவன், சங்கராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக கிருஷ்ணமுர்த்தி, சங்கராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளராக மேலப்பட்டு ராசேந்திரன் ஆகியோரை நியமித்துள்ளார்.

புதயதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் இளந்தேவன், கிருஷ்ணமூர்த்தி, மேலப்பட்டு ராசேந்திரன் ஆகியோர் நேற்று காலை சங்கராபுரம் கடைவீதியில் உள்ள அண்ணாதுரை, எம். ஜி. ஆர். , அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் நகர செயலாளர் நாராயணன், கார்த்தி, வழக்கறிஞர் தாமரைசெல்வன், அண்ணாமலை, ஒன்றிய அவை தலைவர் அண்ணாமலை, ஜியாவுதீன், அரி கோவிந்தன், குமரவேல், வழக்கறிஞர் பாரி, மனோகர் உள்ளிட்ட அ. தி. மு. க. , வினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி