சங்கராபுரம்: கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து

1840பார்த்தது
சங்கராபுரம்: கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து
சங்கராபுரம் அருகே தனியார் கல்லுாரி பஸ் கவிழ்ந்து 3 மாணவிகள் காயத்துடன் தப்பினர்.

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் கல்லுாரியை சேர்ந்த டிஎன்32 யு 5114 என்ற எண் கொண்ட ஸ்வராஜ் மஸ்தா பஸ்சை மஞ்சப்புத்துாரை சேர்ந்த பரமகுரு, 36; நேற்று மாலை கல்லுாரி முடிந்து மாணவிகளை வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் காலனி அருகே சென்றபோது, பஸ் ஸ்டியரிங் எண்ட் கட்டாகி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த கல்பனா, 18, ரஞ்சிதா, 18; நெடுமானுார் தீபிகா, 19; ஆகிய மூவரும் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பஸ் கண்ணாடியை உடைத்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் காயமடைந்த மாணவிகள் , 3 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி