கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை

62பார்த்தது
கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை
நிறைமதி கிராமத்தில் கோவில் புனரமைப்பு பணிகளை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கைகோரி புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக நிறைமதி கிராம இளைஞர்கள் ஆர். டி. ஓ. , விடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பொதுமக்களால் செல்வ விநாயகர் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறோம். இந்நிலையில் கோவிலில் பழுதடைந்த மேற்கூரை, சுவர்களை அப்புறப்படுத்தி கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு புதுப்பிக்கும் பணிகளை பொதுமக்கள் மேற்கொண்டோம். மேலும் கோவில் இருக்கும் இடம் புறம்போக்கு இடமாகும். இந்நிலையில், கோவில் அருகே குடியிருக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் தங்களது இடத்தில் உள்ளது என்று கூறி புனரமைப்பு பணிகளை தடுத்து பிரச்சனை செய்து வருகிறார்.

எனவே, இடத்தை பார்வையிட்டு உரிய விசாரணை செய்து கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி