சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு இருவர் மீது 'போக்சோ'

1073பார்த்தது
கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். கடந்த 9ம் தேதி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என தனது பெற்றோருடன் சேர்ந்து சிறுமியை மிரட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மற்றும் அவரது தாய், தந்தை மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி