கள்ளக்குறிச்சி: காத்திருக்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

80பார்த்தது
கள்ளக்குறிச்சி: காத்திருக்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 11) கீழ் காணும் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி,காஞ்சிபுரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி