மொபைல் திருட்டு - 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கல்வராயன்மலை மடப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் ரமேஷ், 23; இவர் நேற்று முன்தினம் (செப் 12) மதியம் 2 மணியளவில் கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்திற்கு வந்தார். மடப்பட்டு செல்ல பஸ் இல்லாததால், பேருந்து நிலையத்தில் துாங்கியுள்ளார். அப்போது, கச்சிராயபாளையத்தை சேர்ந்த வினையத்தான் மகன் சுப்ரமணி, 45; என்பவர் ரமேஷின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள மொபைல்போனை திருடி தப்பியுள்ளார். உடன், ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து சுப்ரமணியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்றொரு சம்பவம்: கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் குணசேகரன், 34; நேற்று முன்தினம் (செப் 12) நண்பரை அழைத்து செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்திற்கு வந்த குணசேகரன் அப்பகுதியில் துாங்கியுள்ளார். அப்போது, பரங்கிநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் சின்னையன், 60; என்பவர் குணசேகரனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல்போனை திருடி தப்பினார். உடன், குணசேகரன் மற்றும் சிலர் சின்னையனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் அளித்த புகாரின் பேரில், சுப்ரமணி மற்றும் சின்னையனை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.