தனுஷ் விவாகரத்து வழக்கில் நவ.27ஆம் தேதி தீர்ப்பு

79பார்த்தது
தனுஷ் விவாகரத்து வழக்கில் நவ.27ஆம் தேதி தீர்ப்பு
தனுஷ் விவாகரத்து வழக்கில் நவ.27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்றைய விசாரணையில், தனுஷ், ஐஸ்வர்யா தனித்தனியாக ஆஜரான நிலையில், சேர்ந்து வாழ விரும்பவில்லை என இருவரும் உறுதிபட தெரிவித்துள்ளனர். பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும், விவாகரத்து வேண்டும் எனவும் நீதிபதியிடம் கூறியுள்ளனர். 2004ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி