"தக் லைஃப்" படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி?

75பார்த்தது
"தக் லைஃப்" படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி?
இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடுத்து ‘ஜீனி’, ‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனால் தக் லைஃப் படத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக, ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான இதேபோல கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி