ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர
நிலநடுக்கம் காரணமாக அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான்
பிரதமர் கிஷிடா வலியுறுத்தியுள்ளார். சுனாமி மீண்டும் தாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும்,
நிலநடுக்கம் காரணமாக அணுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், கொந்தளிப்புடன் காணப்படும் கடல் நீர் பல இடங்களில் தாழ்வான பகுதிகளை சூழத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.