இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) கடந்த டிசம்பர் 26 அன்று இரவு காலமானார். அவர் உயிரிழக்கும் முன் எடுத்த கடைசி படம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலானது. இது உண்மையா? என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு பல சமூக ஊடக பதிவுகளில் இதே புகைப்படம் வெளியானது. அக்டோபர் 14, 2021 தேதியிட்ட ஒரு பதிவின்படி, இந்த புகைப்படம் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.