கருத்து வேறுபாடு காரணமாக
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான்' படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து பாலா 'வணங்கான்' படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், 'டெவில்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாலாவிடம், மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது என்ன கேள்வி. என் தம்பியுடன் இணைவதற்கு என்ன வாய்ப்பு என்று கூறியுள்ளார். பாலாவின் இந்த பதில்,
சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் சூர்யாவை வைத்து பாலா புதிய படத்தை இயக்கவும் வாய்ப்புள்ளது.