டெல்லியில் இயக்குனர் அமீரிடம் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது இயக்குநர் அமீரின் வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குனர் அமீரை போதைப்பொருள் கடத்தல் பிரிவு விசாரணையில் எடுத்துள்ளது.