நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள பக்தர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி என்றும் நித்யானந்தா தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? எனவும் நீதிபதி கேள்வியெழுப்பினார். இந்த மனு குறித்து, ராஜபாளையம் டி.எஸ்.பி. பதில் மனு தாக்கல் செய்யவும் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரம், சேத்துார் ஆகிய இடங்களில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.