திருவள்ளூர் திருத்தணி அடுத்த மேல்முருகம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சபரி (9) என்ற சிறுவன் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தின அருகில் உள்ள முள் புதர் நிறைந்த பகுதியில் சிறுநீர் கழித்துவிட்டு திரும்பும்போது சாரைப்பாம்பு கடித்துள்ளது. இதனையறிந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.