மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 2025 ஆம் ஆண்டு போர்டு தேர்வுகளுக்கு 15% வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ வாரிய அதிகாரி விகாஸ் குமார் அகர்வால் கூறுகையில், “பாடத்திட்டம் குறைப்பு வாரியத்தின் வளரும் கல்வி கட்டமைப்போடு ஒத்துப்போகிறது, அதிக உள்ளடக்கம் இல்லாமல் தலைப்புகளை இன்னும் விரிவாக ஆராய மாணவர்களுக்கு இடமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.